கருணாநிதிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் புகழாரம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கருணாநிதிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் புகழாரம்
x
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து துணை முதலமைச்சரும், அவை முன்னவருமான பன்னீர்செல்வம் பேசினார். 94 ஆண்டுகள் நாட்டுக்காகவும், கட்சிக்காகவும் அரும்பாடுபட்ட கருணாநிதி, மன உறுதி, தன்னம்பிக்கை கொண்ட தலைவர் என அவர் புகழாரம் சூட்டினார். அரசியலில் மாற்று கருத்துடையவர்களை தன் தமிழால் ஆட்கொண்டவர் என துணை முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். ஆகையால் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் கருணாநிதி மீது அன்பு கொண்டிருந்தனர் என்றும் அவர் கூறினார். 

சுதந்திர தினத்தன்று, முதலமைச்சர்கள் கோட்டையில் கொடியேற்றும் உரிமையை, பெற்று தந்தவர் கருணாநிதி எனக் குறிப்பிட்ட துணை முதலமைச்சர், எழுத்து, பேச்சாற்றலால் மக்களை கவர்ந்த அவர், அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும் நகைச்சுவையாகவும் பதில் அளிக்கும் திறன் கொண்டவர் எனக் கூறினார். அயராது உழைத்த கருணாநிதி இன்று நம்மிடையே இல்லை, அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த துணை முதலமைச்சர், கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என்றார். 


கருணாநிதிக்கு பன்னீர்செல்வம் புகழாரம் - மூத்த பத்திரிகையாளர் மாலன் கருத்து :கருணாநிதிக்கு பன்னீர்செல்வம் புகழாரம் - மூத்த பத்திரிகையாளர் மாலன் கருத்து 


Next Story

மேலும் செய்திகள்