சுகாதார அதிகாரி அலுவலகத்தில் சோதனை - 38 தங்க நாணயங்கள், ரூ.1 லட்சம் சிக்கியது

விழுப்புரத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதார அதிகாரி அலுவலகத்தில் சோதனை - 38 தங்க நாணயங்கள், ரூ.1 லட்சம் சிக்கியது
x
விழுப்புரத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள தாட்கோ அலுவலகத்தின் மேல்தளத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.

இங்கு துணை இயக்குனராக டாக்டர் பாலுசாமி பணியாற்றி வருகிறார்.

இவர் ஆங்கில புத்தாண்டையொட்டி பரிசு பொருட்கள் மற்றும் பணம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

சுமார் ஐந்தரை மணி நேரம் நடத்திய இந்த சோதனையில்,  38 தங்க நாணயங்களும், வெள்ளியினால் ஆன வேல், விநாயகர் சிலை மற்றும் கணக்கில் வராத ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை சிக்கியது. 

அதோடு சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணை முடிந்த பிறகே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்