இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்
பதிவு : ஜனவரி 02, 2019, 08:05 AM
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று கூடும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன்படி, காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. 2019ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசுகிறார். ஆளுநர் உரையில், அரசின் திட்டங்கள் குறித்த அம்சங்கள் இடம் பெறும்.  இதையடுத்து, சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் கூட்டப்பட்டு, எத்தனை நாட்களுக்கு கூட்டத் தொடரை நடத்துவது என முடிவு செய்யப்படும். ஆளுநர் உரை மீதான விவாதம், மானிய கோரிக்கை விவாதம் போன்றவை குறித்தும் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.