ஐஐடி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கண்காட்சி : ஜனவரி 3 முதல் 6 ம் தேதி வரை நடைபெறுகிறது

சென்னை ஐஐடி கல்வி நிறுவனம், தென்னிந்திய அளவில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கண்காட்சியை வரும் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடத்த உள்ளது.
ஐஐடி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கண்காட்சி : ஜனவரி 3 முதல் 6 ம் தேதி வரை நடைபெறுகிறது
x
சென்னை ஐஐடி கல்வி நிறுவனம், தென்னிந்திய அளவில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கண்காட்சியை வரும் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடத்த உள்ளது. இது தொடர்பாக பேசிய ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் இடம் பெறுவதுடன், உலக அளவில் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த கருத்தரங்குகள் நடைபெறும் என்றார். சுமார் 60 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார். சமீபத்தில் ஐஐடி உணவகத்தில் மாணவர்களுக்கிடையே பாகுபாடு காட்டப்பட்டது குறித்து கேட்டபோது, அந்தப் பிரச்சினை முடிந்து விட்டது என்று பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்