புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்...

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் விளையாட காளைகள் தயாராகி வருகின்றன.
x
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார விழாவில் ஒன்றான ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் ஜனவரி 2ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, நாட்டினம், புலிகுளம் உள்ளிட்ட  காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். காளைகளின் உடல் வலிமைக்காக, வழக்கமான உணவை தவிர்த்து, ஊட்டசத்து மிகுந்த உணவுகள் வழங்கப்படுகிறது. நடை, ஓட்டம், நீச்சல், மண்ணை குத்தி கொம்புகளை கூர் தீட்டுவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால் தான் மழை பெய்து, விவசாயம் செழிப்பதாக நம்பும் கால்நடை வளர்ப்போர், வீரத்தை பறை சாற்றும் பாரம்பரிய விளையாட்டுக்காக எதையும் செய்ய காத்திருப்பதாக கூறுகின்றனர். களத்தில் காளைகளை மல்லுக்கட்ட மாடுபிடி வீரர்களும் விறுவிறுப்பாக தயாராகி வருவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்