ஆங்கிலபுத்தாண்டு : கிழக்கு கடற்கரை சாலையில் கண்காணிப்பு தீவிரம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கிழக்கு கடற்கரை சாலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என காஞ்சிபுரம் மாவட்டம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமனி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலபுத்தாண்டு : கிழக்கு கடற்கரை சாலையில் கண்காணிப்பு தீவிரம்
x
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கிழக்கு கடற்கரை சாலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என காஞ்சிபுரம் மாவட்டம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமனி தெரிவித்துள்ளார். குடிபோதை மற்றும் அதிவேகமாக வாகனம் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரித்துள்ளார். கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஓட்டல்களில், அனுமதி பெறாமல் கடற்கரையில் மதுவிருந்து, கேளிக்கை நிகழ்ச்சி நடத்தவும், கடலில் இறங்கி குளிக்கவும், படகு சவாரி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மாமல்லபுரம், கோவளம், வேடந்தாங்கல், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 900 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்