ஐயப்பன் கோவிலில் 67ம் ஆண்டு திருவிழா விமர்சையாக கொண்டாட்டம்...

மதுக்கரையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 67ம் ஆண்டு திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
x
கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 67ம் ஆண்டு திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை முதல் நள்ளிரவு 2 மணி வரை நீடித்த இந்த விழாவில், மூன்று கும்கி யானைகளுடன் ஐயப்பன் திருவீதி உலா, செண்டை மேளம் முழங்க நடைபெற்றது. இதில்,  ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசித்தனர். விழாவின் நிறைவாக சுமார் ஒரு மணி நேரம் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

ரதத்தில் அய்யப்பசுவாமி ஊர்வலம்
                  

இதேபோல, மேட்டுப்பாளையம் சிவன்புரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில், நடைபெற்று வந்த 28 வது மண்டல மகோற்சவ நேற்று நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. இதையொட்டி  நேற்று மாலை ஸ்ரீஅய்யப்பசுவாமி ஊர்வலம் நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய ரதத்தில் எழுந்தருளிய ஸ்ரீஅய்யப்பசுவாமி, பெண்கள் தீபங்கள் ஏந்திவர, பஞ்சவாத்தியங்கள் முழங்க, முக்கிய சாலைகள் வழியாக சென்று கோவிலை அடைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்