இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு திருடர்கள் தப்பி ஓட்டம்...
கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியில் திருடர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியில் திருடர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சீனிவாச பிரபு என்பவரின் வீட்டிற்குள் திருடி கொண்டிருந்த கொள்ளையர்கள் பார்த்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து, கைப்பற்றிய நகைகளுடன் திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர். சுவர் ஏறி குதித்து தப்பி செல்லும் அவசரத்தில், தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு சென்றனர். அதனை சோதனையிட்டதில் பல தங்க நகைகள் கைப்பற்றபட்டுள்ளன. அந்த நகைகளை அவர்கள் அருகே உள்ள வீடுகளில் கொள்ளையடித்துவிட்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு திருடர்களை தேடி வருகின்றனர்.
Next Story

