'ஸ்டார் 2.0' திட்டம் : 22,05,870 ஆவணங்கள் மென்பொருள் வழி பதிவு

தமிழக அரசின் பதிவுத்துறைக்கான ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான 'ஸ்டார் 2.0' திட்டத்தில், 22 லட்சத்து ஐந்தாயிரத்து 870 ஆவணங்கள், பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டார் 2.0 திட்டம் : 22,05,870 ஆவணங்கள் மென்பொருள் வழி பதிவு
x
தமிழக அரசின் பதிவுத்துறைக்கான ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான 'ஸ்டார் 2.0' திட்டத்தில், 22 லட்சத்து ஐந்தாயிரத்து 870 ஆவணங்கள், பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த திட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால், கடந்த பிப்ரவரி 12ம் தேதி துவக்கப்பட்டு, டிசம்பர் 27ம் தேதி வரையிலான கால கட்டத்தில், இந்த பதிவு நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. பதிவு செய்த அன்றே திரும்பி வழங்கக்கூடிய ஆவணங்களை, அதாவது 'Documents returnable on same day' எனும் அடிப்படையில், உடனுக்குடன் ஸ்கேன் செய்து பொது மக்களுக்கு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்