சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 4-ஆம் தேதி துவக்கம்
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ள சென்னை புத்தக கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ள சென்னை புத்தக கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இந்த தகவலை தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க தலைவர் வைரவன் தெரிவித்துள்ளார். ஜனவரி 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் ஒன்றரை கோடி புத்தகங்கள் இடபெறும் எனவும், கண்காட்சியில் 15 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story

