ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பலி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பலி
x
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரது மகன்கள் பிரசாந்த் மற்றும் பிரதாப் ஆறாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு பயின்று வருகின்றனர். நேற்று மாடு மேய்க்க சென்ற இருவரும் வீடு திரும்பாததால், அவர்கள் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை ஏரியில் பிணமாக மிதந்த சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏரியில் குளிக்க சென்ற போது , எதிர்பாரத விதமாக நீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்