பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்: "பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை" - ராதாகிருஷ்ணன்

அரசு மருத்துவமனையில் தவறுதலாக எச்.ஐ. வி ரத்தம் செலுத்திய விவகாரத்தில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
அரசு மருத்துவமனையில் தவறுதலாக எச்.ஐ. வி ரத்தம் செலுத்திய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சாத்தூர் முத்து என்ற 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு உயர் தர சிகிச்சை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய பின், மதுரை - ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில், "தந்தி டிவி" -க்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரத்த வங்கி ஊழியர்கள் வளர்மதி, கணேஷ்,. ரமேஷ் ஆகிய மூவரும் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். எனவே, இந்த சம்பவத்தால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை என ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்