வெளிநாடு செல்பவர்களுக்கு முன் வைப்புத் தொகை : பிரச்சினை என்றால் ஊர் திரும்ப உதவும்

தமிழகத்தில் இருந்து குவைத்துக்கு வீட்டு வேலை செய்ய செல்லும் பெண்கள் பலர் ஏமாற்றப்படுவதாக குவைத் மனித உரிமை ஆணையத்தில் பணிபுரியும் நாகர்கோயிலை சேர்ந்த இளைஞர் ஆல்வின் ஜோஸ் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்பவர்களுக்கு முன் வைப்புத் தொகை : பிரச்சினை என்றால் ஊர் திரும்ப உதவும்
x
தமிழகத்தில் இருந்து குவைத்துக்கு வீட்டு வேலை செய்ய  செல்லும் பெண்கள் பலர் ஏமாற்றப்படுவதாக குவைத் மனித உரிமை ஆணையத்தில் பணிபுரியும் நாகர்கோயிலை சேர்ந்த இளைஞர் ஆல்வின் ஜோஸ் தெரிவித்துள்ளார்.   தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு  குவைத்தில் சட்ட ரீதியான உதவிகளை செய்யும் இவர் , இந்திய தூதரகத்தில் தன்னார்வ தொண்டராகவும் செயல்பட்டு வருகிறார். இது குறித்து கூறும் அவர், கடந்த ஓராண்டில்  தமிழகத்திலிருந்து வந்த 8 ஆயிரம் பேர்  பிரச்சினைகளை சந்தித்துள்ளனர்.  இதற்கு  கேரள மாநிலம் போல தமிழக அரசும் திட்டம் வகுக்க வேண்டும். கேரளாவில் வெளிநாடு செல்பவர், பாதுகாப்பு வைப்பு தொகையாக   34 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும்.  இதனால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் எந்த சிரமமும் இன்றி , இந்தத் தொகை மூலம் அவர்கள் ஊர் திரும்ப முடியும்.  இதைப்போல தமிழக அரசும் பாதுகாப்பு முறைகளை  உருவாக்க வேண்டும் என்றும் ஆல்வின் ஜோஸ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்