கிறிஸ்துமஸ் கோலாகலம் - தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுக்க உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் கோலாகலம் - தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
x
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் டிசம்பர் 25 -ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு தமிழக தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஏசு கிறிஸ்து பூவுலகில் பிறந்த செய்தியை வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் வாசித்தார்.

அதேபோல், 166 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது இயேசு கிறிஸ்துவின் திரு உருவ பொம்மைக்கு ஆராதனை செய்து, பொதுமக்களுக்கு பேராயர்கள் கிறிஸ்துமஸ் ஆசி வழங்கினார்கள்.

தூத்துக்குடியில் உள்ள முக்கிய தேவாலயங்களான பனிமய மாதா பேராலயம், திரு இருதய மேற்றிராசன ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம், தூய பேட்ரிக் தேவாலயம் மற்றும் தூய பேதுருதேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்த இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் பொதுமக்களுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் கேரல் வாகனங்கள் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்