"8,000 சத்துணவு மையங்களை மூட உத்தரவு" - சமூக நல ஆணையர் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்பட்டு வரும் 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.
x
அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில், மதிய உணவளிக்கும் சத்துணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள 43 ஆயிரத்து 200 சத்துணவு மையங்கள் மூலம் 50 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் பல சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது. 

இதனை தொடர்ந்து, 25க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்படும் 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட, சமூக நல ஆணையர் அமுதவள்ளி உத்தரவிட்டுள்ளார். அருகிலுள்ள மையங்களில் உணவு சமைத்து, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27ஆம் தேதி போராட்டம் நடத்த தமிழ்நாடு சத்துணவு திட்ட ஊழியர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்