செருப்பே அணியாத வினோத கிராம மக்கள்...!

மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தின் பெயர் அண்டமான். பெயர் மட்டும் வினோதம் அல்ல. இந்த கிராமத்தினர் கடைபிடிக்கும் வழக்கம் ஒன்றும் வினோதமாகத்தான் இருக்கிறது.
x
மதுரை மாவட்டத்தில் அந்தமான் என்றொரு கிராமம் இருக்கிறது. காஞ்சிராம்பட்டிக்கும் மஞ்சம்பட்டிக்கும் இடையேதான் இந்த கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு வினோதமான பழக்கவழக்கம் பல ஆண்டுகளாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் முதல் 80 வயது பாட்டி வரை யாருமே எந்தக் கேள்வியும் கேட்காமல் கடைபிடிக்கின்றனர். சிறுவர், பெரியவர், படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசம் எதுவுமின்றி யாருமே செருப்பு அணிவதில்லை என்பதுதான் ஆச்சர்யம். இந்த கிராமத்தில் சுமார் 100 க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. 500 க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் விவசாயக் கூலி வேலைக்கே செல்கின்றனர். ஆனாலும் யாரும் செருப்பு அணிவதில்லை. அதனால் அவர்கள் அசவுகரியமாகவும் உணருவதில்லை.
கொளுத்தும் வெயில் என்றாலும், தேங்கியிருக்கும் மழை நீர் என்றாலும் சரி செருப்பே அணிவதில்லை. பள்ளி சென்று திரும்பும் மாணவர்கள் கூட ஊருக்குள் வரும்போது, செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டுதான், வருகின்றனர். இந்தப் பழக்கம் எப்படி வந்தது அதற்கு காரணம் என்றால், தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாக சொல்லப்பட்டு வரும் கலாசாரம் என்பதால் கடைபிடிக்கிறோம் என்றே பதில் அளிக்கின்றனர். இதை மீறினால் கடுமையான காய்ச்சல் வரும். அதை குணப்படுத்தவே முடியாது என்பதே இவர்களது நம்பிக்கையாக உள்ளது. ஊரில் எல்லோருமே இந்த வழக்கத்தைக் கடைபிடிக்கக் காரணம் மந்தையம்மன் மீதுள்ள பக்தி என்று, முதியவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். அதே நேரம் இதனை மூடநம்பிக்கையாக பார்க்கவில்லை. என்றும் கர்ப்பிணிகள், வயதானவர்கள் மூத்த குடிமக்கள், காயமடைந்தவர்கள், குழந்தைகளுக்கு விதிவிலக்கு அளிக்க முன்வந்தபோதுகூட அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்