"தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அச்சங்கத்தின், செயற்குழு உறுப்பினர் அன்புதுரை வழக்கு தொடர்ந்தார். இதனை அவசர வழக்காக ஏற்க வேண்டும் என்ற விஷாலின் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம், மனுவை விசாரித்தது.  இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, முறையாக தேர்தல் நடத்தி  தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தடுத்தது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், உடனடியாக சீலை அகற்ற வேண்டும் என்றும் அலுவலக ஆவணங்களை சங்கங்களின் துணை பதிவாளர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் அனைத்து உறுப்பினர்களும் சங்கத்திற்குள் நுழைய அனுமதி உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, வழக்கை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்