சாலைகளில் இடையூறாக பேனர் வைக்க இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் அதிரடி

சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, அரசியல் கட்சிகள் பேனர் வைக்க கூடாது என உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது
x
* சென்னையில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது, விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், டிராஃபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

* அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேனர் விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதாகவும், அதுகுறித்து விரிவான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

* அந்தப் பதிலை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளை மாநகராட்சி அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என கடும் அதிருப்தி தெரிவித்தனர். 

* பேனர் வைக்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 

* கடந்த 16-ஆம் தேதி வைக்கப்பட்ட பேனர்களால் யாருக்கும் இடையூறு ஏற்படவில்லை என்று, அந்தந்த காவல்நிலைய ஆய்வாளர்களிடம் கடிதம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

* உத்தரவுகளை பிறப்பித்து பிறப்பித்து வெறுத்து போய்விட்டதாக தெரிவித்த நீதிபதிகள், விதிகளையும், நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவோம் என தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

* இதையடுத்து விசாரணையை வரும் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக அரசியல் கட்சிகள் பேனர் வைக்க கூடாது என உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்