தென்னிந்தியாவிலேயே மிக நீளமான இரும்பு பாலம் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 220 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தென்னிந்தியாவிலேயே மிக நீளமான இரும்பு பாலம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.
x
மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முயற்சியால் 220 கோடி ரூபாய் செலவில் வெட்டுவென்னி முதல் பம்மம் வரை இரண்டரை கிலோ மீட்டர் நீளத்துக்கு இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. தென்னிந்தியாவிலேயே மிக நீளமான இந்தப் பாலப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்