பாண்டிய மன்னர் காலத்து சிலை திருட்டு - தொடரும் உயிர் பலி : கோவிலை புனரமைக்க மக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோவிலில் விலை மதிப்பில்லா சிலைகள் மாயமாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
x
திருமங்கலம் அருகே செளடார்பட்டியில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவில் பாண்டியர் காலத்தில்  கட்டப்பட்டது. இந்த கோவிலில், 5 வருடங்களுக்கு முன்பு நவபாசன மீனாட்சி அம்மன் சிலை மற்றும்  பெருமாள் சிலை திருடு போயுள்ளது.  கோவிலில் சிலை திருடு போனதால், அபிஷேக ஆராதனைகள் நடைபெறாததால் மக்கள் வருகை குறைந்த நிலையில், கோவில் கோபுரங்கள், கட்டிடங்கள், மண்டபங்கள்  சேதமடைந்தது தற்போது அனைத்தும் அழியும் நிலையில் உள்ளதாக தெரிவித் கிராம மக்கள் விரைந்து கோயிலை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.  சிலை திருடுப் போனதில் இருந்து உயிர்பலி நிகழ்ந்து வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த அரசு முன்வர வேண்டும் என்றும் கோரி உள்ளனர். மேலும் இந்த கோவிலுக்கு சொந்தமான 120 ஏக்கர்  நிலத்தை இந்து அறநிலைத்துறை கைப்பற்றி, அதில் வரும் வருமானம் மூலம் கோவிலில் பூஜைகள் சிறப்பாக நடத்த முன்வர வேண்டும் என செளடார்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்