காற்று, குளிரை மட்டுமே தந்த 'பெய்ட்டி'

ஆந்திராவுக்கு திசை மாறியதால் நிம்மதி சென்னையை குறிவைத்த பெய்ட்டி புயல் திசை மாறியதால் மற்றொரு புயல், மழை பாதிப்பிலிருந்து தமிழகம் தப்பியுள்ளது.
காற்று, குளிரை மட்டுமே தந்த பெய்ட்டி
x

ஆந்திராவுக்கு திசை மாறியதால் நிம்மதி சென்னையை குறிவைத்த பெய்ட்டி புயல் திசை மாறியதால் மற்றொரு புயல், மழை பாதிப்பிலிருந்து தமிழகம் தப்பியுள்ளது. வேதாரண்யம் அருகே கரையை கடந்த கஜா புயல், கடலோர மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி சென்றது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதன் பாதிப்பிலிருந்து முழுமையாக மீள்வதற்குள், சென்னையை குறிவைத்து மற்றொரு புயல் நகர்ந்து வருவதாக தகவல் வெளியானது. கடந்த 13-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த பகுதி, மறுநாளே தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

சாதகமான பருவநிலை காரணமாக இது மேலும் வலுவடைந்து, கடந்த 15-ம் தேதி புயலாக உருவெடுத்தது. பெய்ட்டி என பெயரிடப்பட்ட இந்த புயல், சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே கஜா புயல் பாதிப்பில் இருந்த மீளாத தமிழகத்தில் இது மேலும் பீதியை ஏற்படுத்தியது. கஜா புயல் தாக்கிய டெல்டா மாவட்டங்களுக்கு, பெய்ட்டி புயலால் எந்த பாதிப்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், அது சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழையை கொடுக்கும் என கூறியது.

ஆனால், திடீரென பெய்ட்டி புயல் படிப்படியாக ஆந்திர கரையை நோக்கி வடக்கு திசையில் நகர்ந்தது. தமிழகத்தில் கரையை கடக்கவில்லை என்றாலும், பெய்ட்டி புயலால் 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்தது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், புயல் மழையை எதிர்கொள்ள அரசு நிர்வாகமும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. ஆனால், பெய்ட்டி புயலால், தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. காற்று மற்றும் குளிரை மட்டுமே உணர முடிந்தது. புயல் பாதிப்பிலிருந்து தப்பியுள்ள தமிழக மக்கள் இதனால் நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்