'பெய்ட்டி' புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள "பெய்ட்டி' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும், பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
x
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  சனிக்கிழமை புயலாக வலுப்பெற்றது. சென்னைக்கு கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த "பெய்ட்டி" புயல், தீவிர புயலாக மாறி ஆந்திராவின் மசூலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே நாளை பிற்பகல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர்,  உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீடடர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையில் இருந்து சென்னையில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் எனவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்