கார் விலை ஜனவரி முதல் உயர்கிறது...?
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
* மாருதி சுசூகி, பிஎம் டபிள்யு நிறுவனங்களைத் தொடர்ந்து டொயோட்டா, ஹோண்டா, நிஸான், ஃபோர்டு, டாடா உள்ளிட்ட நிறுவனங்களும் கார்களின் விலையை ஜனவரி முதல் உயர்த்த உள்ளதாக கூறியுள்ளன.
* முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசூகி நிறுவனத்தில் .2 புள்ளி 53 லட்சம் முதல் 11 புள்ளி 45 லட்ச ரூபாய் வரையில் கார்கள் உள்ளன . தற்போது இந்த நிறுவனம் விலை உயர்வை அறிவித்தாலும், எவ்வளவு உயர்த்தப்படும் என்ற விவரம் வெளியிடப் படவில்லை.
* டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விலை 40 ஆயிரம் ரூபாய் வரை உயரும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது . ஹோண்டா நிறுவனம் தங்களது உற்பத்திச் செலவு 4 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் விலையை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளது.
* நிசான் நிறுவனம் தங்களது அனைத்து மாடல் கார்களின் விலையையும் 4 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக கூறியுள்ளது. ஃபோர்டு இந்தியா நிறுவனம் தங்களது கார்களுக்கு 2.5 சதவீதம் வரை விலை உயர்த்த வாய்ப்புள்ளதாக
அறிவித்துள்ளது.
* தவிர டொயோட்டா கிரிலோஸ்கர், பிஎம்டபிள்யூ, ரெனால்ட், இசூசூ உள்ளிட்ட நிறுவனங்களும் விலையை உயர்த்த உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.
* தற்போது வரை மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவிக்கவில்லை என்றாலும், ஆண்டு முடிவதற்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால் இந்த நிறுவனங்களும் விலை உயர்வை அறிவிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Next Story