சென்னை ஐ.ஐ.டி உணவகத்தில் வகுப்பு பிரிவினை
சென்னை ஐஐடி நிறுவனத்தில் மாணவர்கள் உணவகத்தில், சாதிய பாகுபாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை ஐஐடி நிறுவனத்தில் மாணவர்கள் உணவகத்தில், சாதிய பாகுபாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. பல்வேறு உணவகங்கள் செயல்படும் அங்கு, 'ஹிமாலயன்' என்ற உணவகத்தில் பிரிவினை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில், சைவம் சாப்பிடுவோர் மட்டுமே கைகழுவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பூண்டு, வெங்காயம் சேர்க்கப்பட்ட ஒரு பிரிவும், இவை சேர்க்கப்படாத ஒரு பிரிவும் என தனித்தனியாக அறிவிப்பு பிரசுரம் ஒட்டப்பட்டிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க ஐஐடி நிர்வாகத்தினர் யாரும் முன்வரவில்லை.
Next Story