'கஜா'வில் சாய்ந்து காய்ந்து கிடக்கும் மரங்கள் : தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் அகற்றுமாறு கோரிக்கை

'கஜா'வில் சாய்ந்து காய்ந்து கிடக்கும் மரங்கள் : தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் அகற்றுமாறு கோரிக்கை
கஜாவில் சாய்ந்து காய்ந்து கிடக்கும் மரங்கள் : தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் அகற்றுமாறு கோரிக்கை
x
கொடைக்கானல் வனப்பகுதிக்குள் கஜா புயலால் சாய்ந்துள்ள மரங்களை தீப்பற்றும் முன் அகற்றுமாறு வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் தஞ்சை டெல்டா உள்பட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயல், கொடைக்கானல் வனப்பகுதியையும் விட்டுவைக்கவில்லை. காற்றின் சுழற்சியில் யூக்கலிப்ட்ஸ், வாட்டில், பைன் மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் சேதமாகின. தற்போது, வெயிலடிக்கத் தொடங்கியுள்ளதால், உராய்வில் தீப்பற்றிவிடும் என்றும், இதனால், வனம் முழுவதும் நாசமாகும் சூழல் உள்ளதால் அதை தவிர்க்க மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்