விடுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்கு என்ன வழி..? ரகசிய கேமராக்களை கண்டறிவது எப்படி?

ரகசிய கேமராக்களின் பார்வையில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
x
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்களை வைத்து பெண்களின் அந்தரங்கங்களை படம் பிடிக்க முயன்ற சஞ்சீவ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். வெளியூர்களில் இருந்து வேலைக்காக சென்னைக்கு வரும் பெண்கள், விடுதிகள் மற்றும் Paying Guest என்று சொல்லப்படும் மகளிர் விடுதிகளில் தங்குவார்கள். 

விடுதிகளில் தங்குவோருக்கு என்ன மாதியான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது? பெண்களின் அந்தரங்கங்களை படம் பிடிக்கும் ரகசிய கேமராக்களால் வேலை தேடி வரும் பெண்கள் இங்கு அச்சப்பட வேண்டிய சூழல். துல்லியமான பதிவுகளை தரும் ரகசிய கேமராக்கள் ஹேங்கர்கள், குண்டு பல்புகள், ஸ்ப்ரேயர்கள் என நாம் யோசிக்க முடியாத பொருட்களில் கூட பொருத்தப்படுகிறது. 

பெண்களின் அந்தரங்கங்களை பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் பரவவிடும் மனநிலையில் உள்ள ஆண்கள் இதுபோன்ற குற்றங்களை துணிந்து செய்கிறார்கள்...இதுமாதிரியான நுண்ணிய கேமராக்களிடம் இருந்து பெண்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி என விளக்குகிறார் கேமராக்களை பற்றி ஆய்வு  செய்யும் நிபுணர் ராமச்சந்திரன்.

அதேநேரம் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதும் இங்கே அவசியமானதாக இருக்கிறது. கடைகளில் உடை மாற்றும் அறைகள், பொது இடங்கள் என எல்லா இடங்களிலும் பெண்களுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனைகளும் கடுமையானதாகவே இருக்கும் என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

ரகசிய கேமராக்களை கண்காணிப்பதற்காக ஏராளமான செயலிகள் இருக்கிறது. சந்தேகத்திற்கு இடமான இடங்களில் இதையும் பெண்கள் பயன்படுத்துவது நல்லது.... அவ்வாறு கேமராக்கள் இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.. 

மகளிர் விடுதிகள், Paying Guest என்று சொல்லப்படும் தங்கும் விடுதிகளில் பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும். மகளிர் விடுதிகளில் உரிய ஆய்வு செய்ய வேண்டும் என்பதும் இங்கு விடுக்கப்படும் கோரிக்கையாக இருக்கிறது. குற்றங்களை தடுக்க பயன்படும் ஒரு கருவியை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவது பெரிய குற்றம்.

Next Story

மேலும் செய்திகள்