அரசு பேருந்து மோதியதில் அப்பளமான கார், 3 பேர் படுகாயம்...

சென்னை கடற்கரை சாலையில், மாநகர பேருந்து மோதியதில் கால் டாக்சியில் பயணித்த ஓட்டுனர் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
x
சென்னை கடற்கரை சாலையில், மாநகர பேருந்து மோதியதில் கால் டாக்சியில் பயணித்த ஓட்டுனர் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அசுர வேகத்தில் வந்த பேருந்து மோதியதில் கார் பல அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது. விபத்தை தொடர்ந்து பேருந்தில் இருந்து ஓட்டுனர் தாவி குதித்து தப்பி ஓடியுள்ளார். போக்குவரத்து காவலர்கள் வர தாமதம் ஆனதை தொடர்ந்து, அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சேர்ந்து காருக்குள் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டுனர் வேகமாக பேருந்தை இயக்கியதால் தான் விபத்து ஏற்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்