கஜா புயலில் சீரழிந்த தோல் சித்திரங்கள் : சித்திரங்களுக்கு உயிரூட்டிய ஓவிய சகோதரர்கள்

புதுக்கோட்டை அருகே ஓவிய சகோதரர்கள் இருவர், புயலில் சீரழிந்த தோல் சித்திரங்களுக்கு உயிரூட்டி, அந்த கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்
கஜா புயலில் சீரழிந்த தோல் சித்திரங்கள் : சித்திரங்களுக்கு உயிரூட்டிய ஓவிய சகோதரர்கள்
மராட்டிய மன்னர் சரபோஜி காலத்தில் தமிழகத்தில் கால் பாதித்து கோலோச்சிய, தோல் பாவை நிழற்கூத்து, தற்போது தொலைந்து வருகிறது. 

மனிதர்களால் மறக்கப்பட்ட இந்த நிழற்கூத்தை, மேலும் நிலைகுலைய செய்தது கஜா புயல். புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசல்பட்டி கிராமத்தை தாக்கிய புயலால், தோல் பாவை பொம்மைகள் அனைத்தும் சீரழிந்துவிட்டன.

கூத்து கட்ட தேவையான அனைத்து படங்களும் சேதமடைந்ததால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடும் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கலைஞர்கள் தவித்தனர். இதனை அறிந்த ஓவிய சகோதரர்கள் அய்யப்பா, ராஜப்பா  ஆகிய இருவரும், சித்திரங்களை புதுப்பித்து, பாவை கூத்து கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர். 

இதனால் நெகிழ்ச்சி அடைந்த அந்த கலைஞர்கள், புத்துயிர் பெற்ற சித்திரங்களை கொண்டு அங்கேயே பாவை கூத்தை நிகழ்த்தி காட்டி ஓவியர்களை மகிழ்வித்தனர். 

தமிழகத்தில் தொலைந்து வரும் தோல் பாவை நிழற்கூத்துக்கு புத்துயிர் அளித்து, தங்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தோல் பாவை மட்டுமில்லை இதுபோன்ற எண்ணற்ற நாட்டுப்புறக் கலைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. பாரம்பரிய கலைகளை பாதுகாத்து, அவற்றை வளர்த்தெடுக்க அரசு முன்வர வேண்டும் என்பதே கலை ஆர்வலர்களின் ஒருமித்த குரலாகும். 


Next Story

மேலும் செய்திகள்