நகரை தூய்மைப்படுத்தும் முயற்சியாக திருச்சியில் திடக் கழிவு மேலாண்மையில் அசத்தும் நபர்

நகரை தூய்மைப்படுத்தும் முயற்சியாக திருச்சியில் திடக் கழிவு மேலாண்மையை மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுத்தும் நபர்.
x
* தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8வது இடம் பிடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறது திருச்சி மாநகராட்சி. இருந்தபோதிலும் அதை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் முனைப்பில் பல புது முயற்சிகளை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை எல்லாம் உரமாக மாற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. 

* அதன் ஒரு பகுதியாக திருச்சியில் அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகள் எல்லாம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகின்றன. அதேபோல் திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்களில் மீதமாகும் பொருட்கள், கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை முறையில் உரமாக மாற்றும்  முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள்.


* நகரின் பிரதான பகுதியான திருச்சி டவுன் ஸ்டேஷன் பகுதியில் திருமண மண்டபத்தின் வாயிலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மாநகராட்சியின் உதவியோடு துவக்கியிருக்கிறார் குமார். முதல் முறையாக இந்த திட்டத்தை தொடங்கியிருக்கும் இவர், இதன் மூலம் கிடைக்கும் உரத்தை மக்களுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளார். 

* இதில் 3 ஆயிரம் கிலோ வரையிலான குப்பைகளை கொட்டி வைத்து அதை உரமாக மாற்ற முடியும் என்பதால் இதற்கு வரவேற்பும் அதிகமாக உள்ளது. மேலும் குப்பைகளை கொட்டுவதால் அந்த பகுதியே சுத்தமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

* பொதுவாக இந்த கருவி இயங்குவதற்கு மின்சாரம் தேவைப்படும். ஆனால் இந்த கருவியில் மின்கட்டணத்தை குறைக்கும் வகையில் பவர் சேவிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

* தூய்மை நகரம், இலவச இயற்கை உரம் போன்ற பயன்பாடுகளை கொண்ட திடக்கழிவு திட்டத்தை மற்ற நகரங்களும் பின்பற்றினால் தூய்மை நகரப் பட்டியலில் இடம் பெறலாம்.

Next Story

மேலும் செய்திகள்