1,400 கர்ப்பிணிகளுக்கு துணை முதலமைச்சர் தலைமையில் சமுதாய வளைகாப்பு

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
1,400 கர்ப்பிணிகளுக்கு துணை முதலமைச்சர் தலைமையில் சமுதாய வளைகாப்பு
x
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுதல் தொடர்பாக, கேரள சட்டப்பேரவையில், ஜனபக்சம் கட்சி உறுப்பினர் ஜார்ஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பினராயி விஜயன், 'முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் முடிவில் இருந்து அரசு பின் வாங்கவில்லை' என கூறினார். புதிய அணை கட்ட அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும்,  அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் கூறினார். பரம்பிகுளம் -ஆழியாறு நதி நீர் ஒப்பந்தம் புதுப்பிப்பது தொடர்பாக தமிழக அரசுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும்,  ஆனால் சில காரணங்களால் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்றும் பினரயி விஜயன் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்