சினிமா வாய்ப்பிற்காக பெண்களை ஆபாச படங்கள், வீடியோக்கள் எடுத்து விற்பதாக காஸ்டிங்க் மோகன் மீது புகார்

சினிமா வாய்ப்பிற்காக என கூறி பெண்களை ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து விற்பதாக காஸ்டிங்க் மோகன் என்பவர் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
சினிமா வாய்ப்புகள் தேடும் இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி மயக்கி  எடுத்த ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்நிலையில் அந்த வீடியோக்கள், போட்டோக்களை வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் ஆடியோ வெளியானது. இதனையடுத்து பல மாடல் பெண்கள், துணை நடிகைகள் அச்சமடைந்திருந்த நிலையில், காஸ்டிங்க் மோகன் ஆபாச வீடியோக்களை பணத்திற்கு விற்ற தகவலும்   வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாடல் பெண்கள், துணை நடிகைகள் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்து வரும் நிலையில் தற்போது மேலும் 2 பெண்கள் புகார் அளித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்