5 மாநில தேர்தல் முடிவு எதிரொலி : ரூ. 4 லட்சம் கோடி விவசாய கடன் தள்ளுபடி?

5 மாநில தேர்தலில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதால், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விவசாய கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 மாநில தேர்தல் முடிவு எதிரொலி : ரூ. 4 லட்சம் கோடி விவசாய கடன் தள்ளுபடி?
x
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டால், தேர்தலுக்கு முன்பாக, உணவு பொருட்கள் விலை குறையும் என்றும், அப்போது, தேர்தலை எதிர்கொள்வது எளிது என்றும் மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதின் மூலம் நாடு முழுவதும் சுமார் 26 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். மொத்தம் 4 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளதாக
மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்