60 ஆண்டுகளாக இடுகாடு இல்லாமல் அவதி : இறந்தவர்களை சாலையில் புதைக்கும் அவலம்

காங்கேயம் அருகே இடுகாடு இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
60 ஆண்டுகளாக இடுகாடு இல்லாமல் அவதி : இறந்தவர்களை சாலையில் புதைக்கும் அவலம்
x
காங்கேயம் அருகே இடுகாடு இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ராமபட்டினம் கிராமத்தில் இறப்பவர்கள், கடந்த 60 ஆண்டுகளாக சாலையோரத்திலேயே புதைத்து வருகின்றனர். இடுகாடு வசதி கேட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கும், தொகுதி எம்.எல்.ஏ-வுக்கும் பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர். சாலையோரத்தில் புதைப்பதால், அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடனே இருப்பதாகவும், அந்த பகுதியில் நிலம் வைத்திருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்