ஸ்டெர்லைட் வழக்கு : "டிச. 17க்குள் தீர்ப்பு" - தேசிய பசுமை தீர்ப்பாயம்

தூத்துக்குடி - ஸ்டெர்லைட் வழக்கில், வரும் 17 ம் தேதிக்குள், தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
x
தூத்துக்குடி - ஸ்டெர்லைட் வழக்கில், வரும் 17 ம் தேதிக்குள், தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.13 பேர் உயிரை பறித்த தூத்துக்குடி போராட்டத்தை தொடர்ந்து, வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. வேதாந்தா குழுமம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் நிர்வாகம் கவலைப்படவில்லை என்பதால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டதாகவும், முழுமையான மதிப்பீட்டுக்கு பிறகே, ஆலையை மூட உத்தரவு பிறப்பித்ததாகவும், தமிழக அரசு சார்பில், வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று, விசாரணை முடிவடைந்து விட்டது. எனவே, மூடப்பட்ட தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா? என்பது, வருகிற 17 ம் தேதி தெரிந்து விடும்.

Next Story

மேலும் செய்திகள்