உதவி ஆய்வாளரை தாக்க முயன்ற திமுக மீனவர் அணி அமைப்பாளர்

சென்னை வாலாஜா சாலையில் நேற்றிரவு அபிராமபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கஜேந்திரன் பணியில் இருந்தபோது, அந்த வழியாக வந்த 2 இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்துள்ளார்.
x
சென்னை வாலாஜா சாலையில் நேற்றிரவு  அபிராமபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கஜேந்திரன் பணியில் இருந்தபோது, அந்த வழியாக வந்த 2 இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்துள்ளார். குடிபோதையில் இருந்த அவர்கள், காவல் உதவி ஆய்வாளரை அடிக்க முயன்றுள்ளனர். சுதாரித்துக் கொண்ட உதவி ஆய்வாளர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார் 3 பேரையும் பிடித்து பிடித்து சென்று விசாரணை நடத்தியதில் அயோத்தியா குப்பத்தை சேர்ந்த சசிகுமார் , எழுமலை , நசித் என்பது தெரிய வந்துள்ளது. சசிகுமார் அயோத்யா குப்பம் மீனவர் சங்க தலைவராகவும், சென்னை மாவட்ட தி.மு.க. மீனவர் அணி அமைப்பாளராகவும் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின், போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்