அன்று அடி வாங்கினேன், இன்று அமைச்சர் ஆனேன் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஆசிரியா்களின் பிரம்பு அடியை தாங்கியதால் தான் இன்று தாம் அமைச்சராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
x
விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே செவல்பட்டியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்க்கும் புத்தாக்க பயிற்சி வகுப்பை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  குத்து விளக்கு ஏற்றி தொடங்கி  வைத்தார், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கல்வியில் சிறந்து விளங்கும் நாடு தான் உண்மையான வல்லரசு என்று கூறினார். ஆசிரியா் கம்பு எடுத்தால் ஒரு மாணவன் வளர்ச்சி அடைவதாகவும், பள்ளியில் படிக்கும் போது ஆசிரியா்களின் பிரம்பு அடியை தாங்கியதால் தான் இன்று தாம் அமைச்சராக இருப்பதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்