மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்

போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
x
போராட்டத்தை  தற்காலிகமாக  வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது. மற்ற மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துக்கு இணையாக தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி மதுரையை சேர்ந்த முகமது யூனுஸ் ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டக்குழு, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் உறுதியளித்தது. இதையடுத்து ஒருநபர் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்? அரசு மருத்துவர்களின் என்னென்ன கோரிக்கைகள் ஏற்கப்படும் என்பது உள்ளிட்டவை குறித்து பதிலளிக்குமாறு சுகாதாரத்துறை முதன்மை செயலக்கு, உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்