ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்கு சிலை - நினைவு நாளில் உறவினர்கள் நெகிழ்ச்சி..

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஒருவருக்கு, 6 அடி உயர வெண்கல சிலை வைத்து, உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்கு சிலை - நினைவு நாளில் உறவினர்கள் நெகிழ்ச்சி..
x
சேலம் சரக டிஐஜியாக இருந்து ஓய்வுபெற்றவர் கோபாலகிருஷ்ணன். கடந்த 1993ஆம் ஆண்டில் வீரப்பனை பிடிக்க நடந்த தேடுதல் வேட்டையின் போது, கன்னி வெடியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இவர், 2016ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தங்கமாபுரிபட்டினத்தில் உள்ள நினைவிடத்தில், அவரது சகோதரர்கள் 6 அடி உயரமுள்ள வெண்கல சிலையை வைத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்