கர்ப்பிணி பெண் மற்றும் சிசு உயிரழந்த விவகாரம் - விளக்கம் கேட்டது மாநில மனித உரிமை ஆணையம்...

கர்ப்பிணி பெண் மற்றும் சிசு உயிரழந்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் சுகாதார துறையிடம் விளக்கம் கேட்டது.
கர்ப்பிணி பெண் மற்றும் சிசு உயிரழந்த விவகாரம் - விளக்கம் கேட்டது மாநில மனித உரிமை ஆணையம்...
x
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 30ஆம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி காஞ்சனாவும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாமாக உயிரிழந்தனர். இதற்கு மருத்துவர் பணியில் இல்லாததும், செவிலியர் கவனக்குறைவாக செயல்பட்டதும் தான் காரணம் என புகார் எழுந்தது. இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் சுகாதார துறையிடம் விளக்கம் கேட்டது. இதனையடுத்து நான்கு பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உயிரிழந்த காஞ்சனாவின் குடும்பம், விஜயமங்களம் மற்றும் திங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரணை  மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்