வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளித்தால் நடவடிக்கை - பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் அரசு அதிகாரி...
விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம் பேரூராட்சி செயல் அலுவலர் வாட்ஸ் அப் மூலம், பொதுமக்களின் குறைகளை நடவடிக்கைகள் எடுத்து அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் பேரூராட்சியின், செயல் அலுவலராக ஜோதி பாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்த பேரூராட்சியில் பணியில் சேர்ந்து ஒரு மாதம் மட்டுமே ஆகும் நிலையில், ஹலோ பேரூராட்சி என்ற வாட்ஸ் ஆப் வழி புகார் சேவையை, அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த ஆப் வழியாக பொதுமக்கள், குடிநீர், தெருவிளக்கு, நகர் தூய்மை குறித்த பிரச்சனைகள் குறித்து தகவல் அளிக்கின்றனர். இந்த புகார்களுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ஜோதி பாஸ் உடனடியாக தீர்வு கண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
Next Story