வள்ளுவர் கோட்டம் - போராட்டங்களுக்கு தடை கோரிய வழக்கு : சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : டிசம்பர் 05, 2018, 08:23 AM
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்க தடை விதிக்க கோரிய மனுவுக்கு ஜனவரி 4 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு மற்றும் , காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்க தடை விதிக்க கோரிய மனுவுக்கு ஜனவரி 4 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு மற்றும் , காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் போராட்டங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிட்டப்பட்டது. போராட்டங்கள் நடத்த, 16 நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும்,  வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே  போராட்டங்களுக்கு  அனுமதி வழங்கப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பதிலளிக்கும்படி மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிற செய்திகள்

பேருந்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, தனியார் பேருந்தின் மீது மோதி உயிரிழந்தார்.

53 views

கால் டாக்சி நிறுவனங்களுக்கு செயல் திட்டம் வகுக்க வலியுறுத்தல்

கால் டாக்ஸி நிறுவனங்களுக்கு புதிய செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என கால் டாக்சி ஓட்டுனர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

16 views

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

22 views

கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி : தென்சென்னையில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்

தென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

20 views

போதை தலைக்கேறிய நிலையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்

திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் போதை தலைக்கேறிய நிலையில், இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த‌தால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

26 views

காவல்துறை வாகனம் மோதி 3 பேர் பலி : பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பியபோது விபத்து

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

56 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.