தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு கல்வி நிதி - புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் வழங்கினார்

தினத்தந்தி சார்பில் அதிக மதிப்பெண் எடுத்த 10 மாணவர்களுக்கு தலா 10ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார் புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர்
x
தினத்தந்தி சார்பில் ஆண்டு தோறும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் கடந்த 2017-18 ஆம் ஆண்டு நடைபெற்ற 10 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு கலந்துகொண்டு, அதிக மதிப்பெண் எடுத்த 10 மாணவர்களுக்கு தலா 10ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கி மாணவர்களை பாராட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்