18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் சத்ய பிரதா சாஹூ விளக்கம்

டி.டி.வி. தினகரன் ஆதரவு 18 எம்.எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் சத்ய பிரதா சாஹூ விளக்கம்
x
டி.டி.வி. தினகரன் ஆதரவு 18 எம்.எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதிகள் காலியாக இருப்பதால், எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் என ஒரு தகவலும், மற்றொரு தரப்பினர், இப்போதைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில்,  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் மேல்முறையீடு செய்துள்ளார்களா என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு உள்ளது. தற்போது வரை  தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் 18 பேரும் மேல் முறையீடு செய்யவில்லை என்ற தகவலை, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு , தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அனுப்பி உள்ளார். எனவே, சத்ய பிரதா சாஹூவின் விளக்கத்தை பரிசீலித்து, எப்போது தேர்தல் நடத்துவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்