ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு, 100-க்கும் மேற்பட்டோர் பேரணி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x
தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆலையை திறக்கலாம் என மூவர் குழு அறிக்கை அளித்துள்ளது.
இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கத் திரண்டு வந்தனர். 

இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை மனு அளிக்க போலீஸார் அனுமதித்தனர். அப்போது பேசிய அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது எனவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்