சென்னை நிறுவனத்தின் கருப்பு பண விவரங்களை இந்தியாவிடம் அளிக்க சுவிட்சர்லாந்து சம்மதம்

சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் கருப்பு பண விவரங்களை இந்தியாவிடம் அளிக்க சுவிட்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
சென்னை நிறுவனத்தின் கருப்பு பண விவரங்களை இந்தியாவிடம் அளிக்க சுவிட்சர்லாந்து சம்மதம்
x
சென்னையை சேர்ந்த ஆதி எண்டர் பிரைசஸ் என்ற நிறுவனத்தின் கருப்பு பண விவரங்களை இந்தியாவிடம் அளிக்க சுவிட்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் தொடர்பான வங்கி கணக்கு தகவல்கள், பணபரிமாற்ற விவரங்களை இந்தியாவிடம் அளிப்பது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 1800 பேர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அப்போது சென்னை பெரம்பூரில் உள்ள ஆதி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. ராஜஸ்தானை சேர்ந்த சுனில், மனிஷ் ஆகியோருக்கு சொந்தமான இந்நிறுவனத்தில் அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலர் தங்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்