திருட்டு வீடியோக்களை ஒழிக்க தமிழக அரசு தயார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள்,திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்தால் திருட்டு வீடியோக்கள் ஒழிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் ஒருமைப்பாடு தின பொதுக்கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்கம் அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுப்பினர்களுக்கு நிமாய்கோஷ் விருது வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரை துறைக்கு தமிழக அரசு செய்துள்ள திட்டங்களை பட்டியலிட்டார். திருட்டு வீடியோ விவகாரம் திரைதுறைக்கு பெரும் சவாலாக உள்ளதாக தெரிவித்த அவர், ஒத்துழைப்பு அளித்தால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். கஜா புயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்