வாக்காளர் அடையாள அட்டை : பிரகாஷ் ராஜ் விளக்கம்

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், 3 வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை : பிரகாஷ் ராஜ் விளக்கம்
x
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், 3 வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஜெகன் மற்றும் சதீஷ் ஆகிய இருவர், தேர்தல் ஆணைய இணைய தள ஆதாரத்துடன் இந்த புகார் மனுவை அனுப்பி உள்ளனர். அதில், நடிகர் பிரகாஷ் ராஜூக்கு, சென்னை - வேளச்சேரி தொகுதியில் இரு வாக்காளர் அடையாள அட்டையும், தெலங்கானாவில் ரங்காரெட்டி தொகுதிக்கு உட்பட்ட முகவரியில் மற்றொரு வாக்காளர் அடையாள அட்டையும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால்,இந்த புகாரை நடிகர் பிரகாஷ் ராஜ் மறுத்துள்ளார். தமக்கு ஒரே ஒரு வாக்காளர் அடையாள அட்டை மட்டுமே இருப்பதாகவும், ஒருவேளை தவறுதலாக வேறு அடையாள அட்டைகள் இருந்தால், தேர்தல் ஆணையம் தாராளமாக ரத்து செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்