செல்போன் கதிர்வீச்சால் பறவைகளுக்கு பாதிப்பா..? - பறவையியல் ஆராய்ச்சி மையம் விளக்கம்
பதிவு : டிசம்பர் 01, 2018, 06:16 PM
செல்போன் கதிர்வீச்சுகளால் பறவை இனங்கள் அழிந்து வருவதாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பறவையியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.
* அண்மையில் வெளியான ரஜினியின் 2 பாயிண்ட் ஓ படத்தில், பறவை இனங்கள் அழிந்து வருவதற்கு  செல்போன் கதிர்வீச்சே காரணம் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

* இதனை கோவை ஆனைகட்டியில் இயங்கி வரும் மத்திய அரசு கல்வி நிறுவனமான சலீம் அலி பறவையியஸ் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சங்கர் மறுத்துள்ளார்.  

* இது குறித்து முறையான ஆய்வுகள் செய்யப்படவில்லை என்றும், நிரூபிக்கப்பட்டால் தான் அதை உறுதி செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பறவை இனங்கள் அழிவுக்கு, பூச்சிக்கொல்லி பயன்பாடு, வாழ்விடங்கள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் பறவையியல் மையத்தின் இயக்குநர் சங்கர் கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.