எழுதப் படிக்க தெரியாத ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு கல்வி கற்பிக்க புதிய திட்டம்...

தமிழகத்தில் எழுதப் படிக்க தெரியாத ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு கல்வி கற்பிக்க புதிய திட்டம் ஒன்று வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது.
x
* தமிழகத்தில் கடைசியாக நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எழுதப் படிக்கத் தெரியாமல், ஒரு கோடியே 25 லட்சம் பேர் இருப்பதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.  இவர்களுக்கு முறைசாரா கல்வி  இயக்குனரகத்தின் கீழ்,  கல்வி கற்பிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

* இதற்காக சிறைகள், கிராமங்கள், குடிசைப்பகுதிகள் என எழுதப் படிக்க தெரியாமல் இருப்பவர்கள் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. சென்னை புழல் சிறையில் உள்ள 420 சிறைவாசிகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதுதொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இவர்கள் அனைவருக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அடிப்படை கல்வியை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், அடுத்த கல்வி ஆண்டில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

* இதற்கான சோதனை அடிப்படையிலான வகுப்பு, சென்னை டிபிஐ வளாகத்தில் தினமும் மாலை வேளையில் நடந்து வருகிறது. டிபிஐ வளாகத்தில் வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர்கள் இதில் பங்கேற்று, ஆர்வத்துடன் கல்வி கற்று வருகின்றனர்.

* குடும்ப சூழல் காரணமாக கல்வியை பாதியில் நிறுத்தியவர்கள், படிப்பை தொடர முடியாமல் இருப்பவர்கள் என பலரும் இப்போது முதியோர் கல்வியை ஆர்வத்துடன் படித்து வருகின்றனர். தற்போது சென்னையில் நடக்கும் இந்த வகுப்புகளில் அவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வதாக கூறுகிறார் இவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியை கனகலட்சுமி.

* கல்வியின் அவசியம் அறிந்து வயதான பிறகும் ஆர்வத்துடன் கல்வி கற்கும் இவர்களை போலவே மற்றவர்களும் முன்வர வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.

Next Story

மேலும் செய்திகள்