லோக் ஆயுக்தா- ஸ்டாலின் வேண்டுகோள்...

லோக் ஆயுக்தா சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'ரகசிய விசாரணை' என்ற விதியை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
லோக் ஆயுக்தா- ஸ்டாலின் வேண்டுகோள்...
x
* சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அதிகாரம் இல்லாத லோக் ஆயுக்தா சட்டத்திற்கு, முறையற்ற விதிகளை அரசு உருவாக்கியுள்ளதன் மூலம், ஊழல் ஒழிப்பின் அடிப்படை நோக்கமே கேலிக்குள்ளாகியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

* ஊழல் புகார்கள் மீது ரகசிய விசாரணை நடத்த வேண்டும், புகாருக்கு உள்ளானவர்கள் குறித்து ஊடகங்களுக்கோ, பொதுமக்களுக்கோ தெரிவிக்கக் கூடாது போன்ற விதிகள், முதலமைச்சரையும், அ.தி.மு.க,  அமைச்சர்களையும், காப்பாற்றுவதற்காக வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்ற விதி, அரசு விரும்பாதவர்கள் யாரும் குழுவில் இடம்பெறக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின்,

* லோக் ஆயுக்தாவிற்கு நேர்மையான தலைவரை நியமிக்க வேண்டும் என்றும், விசாரணை ஒளிவுமறைவு இல்லாமல் நடக்க ரகசிய விசாரணை என்ற விதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்